ஆசிரியர்: வீ.இளவழுதி
வெளியீடு: கவிதா பப்ளிகேஷன்
தொலைபேசி:
044 – 24364243, 24322177
பக்கம்: 248 விலை:
சங்க காலம் நமக்கு கொடுத்த அரியவற்றில் ஐம்பெரும் காப்பியங்களும் ஒன்று. ஆனால், அவற்றில் நமக்கு முழுமையாகக் கிடைத்திருப்பது மூன்று மட்டுமே. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி ஆகியவையே.
வளையாபதியும், குண்டலகேசியும் சிறிதளவே நமக்குக் கிடைத்துள்ளன. நமக்குக் கிடைத்துள்ள சிலப்பதிகாரமும், மணிமேகலையும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற சம காலத்து காப்பியம் எனலாம்.
அவ்வகையில் மணிமேகலை என்னும் இந்நுாலில், கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்த மணிமேகலையின் வரலாற்றை தெளிவாகக் கூறுகிறது.
துறவு பூண்டு வாழ்ந்த காரணத்தால் இது மணிமேகலை துறவு என்றும் அழைக்கப்பட்டது. இதில் புத்த மதக் கொள்கைகள் ஆங்காங்கே விளக்கிச் சொல்லப்படுவதால், இது புத்த மதத்தைச் சார்ந்த நுாலாகவும் கருதப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தின் சில வரலாற்றையும் அறிய முடிகிறது.
இதில் யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை ஆகியவை மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. பல நீதிகளும், கற்புடைய மாந்தர் செயல்களும் இந்நுாலில் கூறப்பட்டுள்ளன.
மணிமேகலை நுாலின் ஆசிரியரான சீத்தலைச் சாத்தனார் கடைச் சங்க காலத்தைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் சாத்தனார்.
மணிமேகலையில் உள்ள, 30 காதைகளையும் கதை வடிவத்தில் ஆசிரியர் படைத்திருப்பது சிறப்புக்கு உரியது.