இந்த கவிதை தொகுப்பு நுாலில், பெண்கள் ஆற்றல் மிக்கவர்களாக உருவாக வேண்டும்.
இளைஞர்கள் நல்லவர்களாக, வல்லவர்களாக இந்த சமுதாய மாற்றத்திற்கு, போராடுபவர்களாக இருக்க வேண்டும்.
ஜாதி, மதம் இல்லாத மனித மனம் வேண்டும் என்ற கருத்துக்களை, இவரது கவிதை முன்வைக்கிறது. குறிப்பாக, அருகம்புல் என்னும் கவிதை தலைப்பில்,
‘மண்ணின் ஆதி மைந்தர்களே
அருகம்புல்லாய் துளிர்த்தெழுவீர்!
அகிலம் போற்ற வாழ்ந்திடுவீர்’
(பக்., 20)
என்று இளைஞர்களை எழுப்பும் வரிகள் பாராட்டப்பட வேண்டியது. காவல் துறையில் பணியில் இருக்கும் போது, தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை வார்த்தையாக்கி வடித்திருக்கிறார்.
– முனைவர் க.சங்கர்