ஆபீஸ் வேலை அலுத்துப்போனதால், சென்னையின் பரபரப்பான பகுதியில் சொந்தமாக, ‘போட்டோ டிசைனிங்’ கடை துவங்கும் இளம் தம்பதி ஒருபுறம். கோபக்கார அம்மாவால், 18 வயதிற்குள் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட துடிப்பான இளம்பெண் மறுபுறம்.
இதில், பலியாவது யார்? பேயாக மாறுவது யார்? இரு கதையும் சந்திக்கும் புள்ளி எது? நிஜமாகவே பேய் இருக்கிறதா, இல்லையா? என, ஏராள சுவாரசியங்கள்... எக்கச்சக்க திருப்பங்கள்...
கதையில், பேய்க்கு, ‘இன்ட்ரோ’ இருக்கிறது. ஆனால் அது, எந்த இடத்திலும் மிகை யதார்த்தமாக ஆகாமல் இருப்பதைக் காணலாம்.
– வெற்றிதாசன்