வலிமையான கருத்துகளையும் எளிமையாக முன்வைப்பதற்குக் கவிதைகளே சிறந்த கருவிகள். தமிழ் வரலாற்றில் மரபுக்கவிதைக்கென்று ஒரு தனி இடம் உண்டு. மரபுகளைக் கடந்து புதுக்கவிதை வடிவங்கள் வரவேற்பு பெற்றுவரும் இன்றைய அளவில் சந்தக் கவிதைகள் அருகிவிட்டன.
இந்நிலையில், பல்லாண்டுகளாக படைத்து வந்த சந்தக் கவிதைகளைத் திரட்டித் தொகுக்கப்பட்ட நுால் இது. பெரும்பாலான கவிதைகள் கவியரங்குகளிலும், பல்வேறு நிகழ்வுகளிலும் பாடப்பட்டவை.
இயற்கை எழில், நாட்டுப்பற்று, அரசாட்சி, பக்தி, கள்ளுண்ணாமை, சமூக மேம்பாடு, சமத்துவம் போன்ற பாடுபொருள்களில் ஆன கவிதைகளுக்கிடையே குழந்தைப்பாடல்கள், தனிநபர் வாழ்த்து மடல்கள், இரங்கற்பாக்கள், பயணக்கவிதைகள் போன்றவை நுாலை நிறைக்கின்றன.
தனிமனிதத் துதிகளைத் தவிர்த்து, நெடிய கவிதைகளைச் சுருக்கிப் படைத்திருந்தால், நுாலுக்கு இன்னும் சிறப்பு சேர்ந்திருக்கும்.