இன்றைய அளவில் புதுக்கவிதைகளின் வரவு மரபுக்கவிதைகளை விஞ்சிவிட்டன. எண்ணிய எண்ணங்களை இயல்பான எழுத்துச் சீற்றத்தோடு எழுதும் கலை புதுக்கவிதை வடிவங்களின் வாயிலாக வளர்ந்திருக்கிறது.
இதயத்தில் தோன்றும் வலிமையான பாடுபொருள்களை இலக்கணங்களுக்கு உட்படுத்தும் சிரமங்கள் இல்லாமல் படைக்கும் தன்னம்பிக்கையும் எழுத்தாற்றலும் இளைஞரிடையே பெருகி வருவது வரவேற்கத்தக்கது.
வாழ்க்கையின் நெருக்கடிகளில் வாசமூட்டும் ‘மழலை’, அன்பை அள்ளிப்பூசும் ‘அம்மா’, வரதட்சணையைச் சாடும் ‘கைக்கூலி சமூகம்’, போன்ற கவிதைகள் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.
அங்கும் இங்கும் உரைநடைகளாகத் தெரியும் வரிகளை இன்னும் செதுக்கி இருந்தால் கவிதைகளின் நேர்த்தி மேலும் கூடி இருக்கும்.
–மெய்ஞானி பிரபாகரபாபு