ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான, மேருமந்திர புராணத்தில் இடம்பெற்ற அறங்கேள்விச் சருக்கத்தை நாடக நுாலாக எழுதியுள்ளார் ஆசிரியர். மேடையில், ‘பத்திரமித்திரன்’ நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டு, மக்கள் மத்தியில் மிகப்பெரும் பாராட்டுகளைப் பெற்றது.
இன்றைய காலகட்டங்களில் நாடகங்கள் நடத்துவது குறைந்துவிட்டன என்பது கவலைக்குரிய செய்தி என்றாலும், காலம் காலமாக போற்றி வளர்க்கப்பட்ட நாடகக் கலைக்கு புத்துயிர் அளிக்கிறது இந்நுால். அனைவரும் படித்து பயன்பெற வேண்டிய அற்புத படைப்பு.