‘குட் நைட்’ சொல்வது பகலிலா, இரவிலா? என்று ‘டாக் ஷோ’ நிகழ்த்தும் அளவிற்கு ‘துாங்கா உலகின்’ துாக்கம் மாறிக் கொண்டே வருகிறது. 20 வயதில் தலைகீழாக படுத்துக் கொண்டு விடிய விடிய இரவைக் கழிக்கும் ‘நவ நாகரிகர்’களால், 40 வயதில் நேராக உட்கார்ந்து மலம் கூட கழிக்க முடியாமல் போகிறது.
எனவே, துாக்கமின்மைக்கு, ‘வேலை, வெட்டி’ என்று ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். ‘காரணம் இருக்கட்டும், நிவாரணம் இருக்கிறதா?’ அது தானே உங்கள் கேள்வி. இருக்கிறது. ‘ஓ... துாக்கத்தில் இவ்வளவு இருக்கிறதா?’ என்று கேட்கும் அளவிற்கு இருக்கிறது.
துாக்கம் தடைபடுவது ஏன், அதனால், 2020ல் மனித இனம் சத்திக்கப்போகும் பிரச்னை என்னென்ன, அதை எதிர்கொள்வது எப்படி போன்ற ஏராள தகவல்களும், தீர்வுகளும் நிறைந்திருக்கும் புத்தகம் நல்லிரவு.
‘தமிழில் வெளியான மனநல மருத்துவ புத்தகங்களில் நல்லிரவு முதன்மையானது’ என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.
மொத்தத்தில் நல்லிரவு நமக்கு நல்வரவு.
– வெற்றி