‘நான் தானே உலகம்; எனது தானே எல்லாம்; படைப்பவன் கடமை எனக்கு எல்லாமே தரணும்’ என்ற போக்கில் மக்கள் திசைமாறியதை படம் பிடிக்கும் ஆசிரியர், இந்த ஐந்து நுால்களை உருவாக்கியிக்கிறார்.
அட்டலக்குமி அர்ச்சகர் ஆன இவர் இலக்கிய ஆசை கொண்டவர். நம்மைச் சுற்றி நடக்கின்ற வாழ்க்கைகளை, அதிகம் அறிந்தவர் என்ற முறையில் இவரது படைப்புகள் உள்ளன.
தவிரவும் அறிவு வளர படிப்பு, செல்வம் வளர உழைப்பு, ஆன்மா வளர அன்பு, உடல் வளர அளவான உணவு என்ற கோட்பாட்டைக் கூறும் இவர் கருத்துக்கள் இந்த நுால்களில் சிறப்புற கையாளப்பட்டிருக்கின்றன.