முகப்பு » வாழ்க்கை வரலாறு » நானும் சினி­மாவும்

நானும் சினி­மாவும்

விலைரூ.250

ஆசிரியர் : ஏவி.எம்.சர­வணன்

வெளியீடு: தினத்தந்தி

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தமிழ் திரைப்­பட தயா­ரிப்பு துறையில், ஜாம்­ப­வ­னாக விளங்­கிய, ஏவி.எம்.நிறு­வ­னத்தின், ஏவி.எம். சர­வணன், தன், 60 ஆண்டு கால திரைத்­துறை அனு­ப­வங்­க­ளையும், அது­பற்­றிய பசு­மை­யான நினை­வு­க­ளையும், மக்­க­ளிடம் பகிர்ந்து கொள்ளும் வகையில், எழு­தி­யுள்ள நுால் இது.
‘தினத்­தந்தி’ நாளி­தழில் தொட­ராக வெளி­வந்து, வாச­கர்­களின் பாராட்டை பெற்­றதால், தற்­போது, நுால் வடிவில் வெளி­யா­கி­யுள்­ளது.
ஏவி.எம்., நிறு­வனம் உரு­வான வர­லாறு, அந்த நிறு­வனம் தயா­ரித்த படங்­களைப் பற்றி தக­வல்கள், அவற்றில் பணி­யாற்­றிய கலை­ஞர்­க­ளு­ட­னான அனு­ப­வங்கள் என, சுவை­யான நாவல் போன்ற நடையில் எழு­தப்­பட்­டுள்­ளது, இந்த நுால்.
‘எம்.ஜி.ஆருக்கும், எனக்கும் இடையே எப்­போதும் ஒரு போட்­டியே நடக்கும். இரு­வரில், யார், முதலில், மற்­ற­வரை முத­லாளி என்று அழைப்­பது என்­பதே அந்த போட்டி.
‘ஏ.சி.திரு­லோ­கசந்­தரின் மகள் திரு­ம­ணத்­திற்கு வந்த, எம்.ஜி.ஆரை, ‘வாங்க முத­லாளி... நீங்கள் வந்­ததில் மகிழ்ச்சி’ என்று கூறினேன். உடனே எம்.ஜி.ஆர்... சரி­யாக வெளி­வ­ராத குர­லோடு, சைகையில், ‘என்னை முத­லாளி என்று கூப்­பி­டா­தீர்கள். என்னால் திருப்பி, முத­லாளி என்று கூப்­பிட முடி­யாது’ என்று கூறினார்.
‘அமெ­ரிக்­காவில் சிகிச்சை பெற்று வந்­தி­ருந்­தது முதல், பேசு­வதில் அவ­ருக்கு சிரமம் இருந்­தது. அவர் அப்­படி கூறி­யதை கேட்­டதும், என் மனமும், கண்­களும் கலங்கி விட்­டன...’ என்­பது போன்ற நெகிழ்ச்­சி­யான சம்­ப­வங்கள் பல உள்­ளன. அது சர­வ­ணனின்  சிறப்பை  பிர­தி­ப­லிக்­கி­றது. இந்த நுாலைப் படிக்கும் ஆர்­வத்தை துாண்­டு­கின்­றன.
– சி.எஸ்.,

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us