தமிழில் செய்யுள் வடிவில், 1,146 பாடல்களை உடைய நுாலாக இயற்றிய வரகவி கீரனுார் நடராசன், வடமொழியிலும் தமிழிலும் பெரும் பாண்டித்யம் பெற்றவர்.
வடமொழியில் அமைந்த சாராவளி, பராசரியம், சந்தான தீபம், பிருகத் ஜாதகம், ஜாதக அலங்காரம் போன்ற பல ஜோதிட நுால்களைத் கற்று, அவற்றின் சாராம்சங்களை உள்வாங்கி, இந்த நுாலை இயற்றியுள்ளார். 12 பாவங்கள், அவற்றின் கிரகங்கள் நின்ற நிலை, அதிலும் நட்சத்திரப் பாதங்களில் நின்ற நிலை, தசா புத்திகள் இவற்றின் பலன்கள் மிக மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
ஜோதிடம் கற்போருக்கும், கற்பிப்போருக்கும் ஒருங்கே பயன்படும் அற்புத நுால் இது.
நல்ல அருமையான கட்டமைப்பில், தெளிவான அச்சில் வெளியிடப்பட்டுள்ள இந்த நுாலில் 82, 86, 87, 90, 91, 94, 95 ஆகிய பக்கங்கள் அச்சடிக்கப்படாமல் உள்ள குறைகளை தவிர்த்திருக்கலாம்.
– மயிலை கேசி