பண்புகளில் தலையாயது அன்பு. அதை தலையங்கமாக்கி முரசு கொட்டி கவிதை வடித்திருக்கிறார். சமூக அக்கறையின் பெருமூச்சு இந்நுாலில் இழையோடியிருக்கிறது. காதல், காதல் தோல்வி, பிரிவு, ஜாதி மதப் பிளவுகள், சமூக அவலங்கள், பெண்களின் சுதந்திரம் எனப் பல தளங்களை தொட்டிருக்கிறார் நுாலாசிரியர். ‘நிலைமாறும் உலகு...! போய் வா என்னுயிரே...! எங்கே போகிறாய்? நெஞ்சு பொறுக்குதில்லையே! காதலின் வண்ணங்கள்! ஆறைவிட ஐந்து பெரிது...!’ ஆகிய கவிதைகள், மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.