நம் முன்னோர் நமக்காக பெற்ற விடுதலையைக் காக்க விழிப்புணர்வு தேவை என்பது இந்த நுாலின் மையக்கருத்தாகும்.
இதில், 1857ம் ஆண்டுக்குப் பின் பிரிட்டிஷாரை எதிர்த்த பல விடுதலைப் போராட்டக்கள நாயகர்களின் ஆவேசங்கள் பதிவாகி உள்ளன. காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை எதிர்த்த அந்தக்கால நேருவின் கோபமும் இடம் பெற்றிருக்கிறது. சகோதரி நிவேதிதாவை குருவாக ஏற்ற பாரதியார், அவரைப்பற்றி பாடிய பாடல்கள் இன்று காணோம் என்ற தகவலும் உள்ளது.
ஆசிரியர் பல காலம் இந்துத்துவா கொள்கைகளில் ஊறியவர் என்பதும், தமிழகம் குறித்த தனி ஆசையால், இப்போது பல உணர்வு பூர்வ தகவல் தொகுப்பாக இதை வெளியிட்டிருக்கிறார் என்பதை அவரது முன்னுரை படம் பிடிக்கிறது.
ஆனால், அவர் காட்டும் வரலாற்று ஆதாரங்களுக்கான நுால்கள், முக்கியக் கருத்துக்கள் எந்த ஆவணத்தில் உள்ளது என்பதை பிற்சேர்க்கையில் அடுத்த பதிப்பில் சேர்த்தால், அது பலருக்கு அப்புத்தகங்களையும் படிக்க ஆர்வம் தரும்.