ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் ஸௌராஷ்ட்ரீ மொழியில் மொழிபெயர்ப்பாகி, ‘பிந்துலா கெநி’ என்ற தலைப்பில் புகார் காண்டம் வெளி வந்துள்ளது. குறள் கருத்துக்கள் அதிகமாக சிலம்பில் கையாளப்பட்டிருக்கிறது. இசை பற்றியும், இசைக்கருவிகள் பற்றியும் நாடகக்கலையை இலக்கணமாகவும் கூறும் பாங்கும் இதன் தனிச்சிறப்பு. சிறப்பு வாய்ந்த சிலப்பதிகாரம் ஸௌராஷ்ட்ரீ மொழியில் பெயர்க்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.