தமிழில் வேத நெறி என்பது நீண்ட கால வரலாற்றுச் சொல். வேதம் என்ற மறை, எழுதாக்கிளவி என்றழைக்கப்படுகிறது. சமஸ்கிருத சொற்கள் கட்டமைப்பில், ஒலியின் வரைவுகளால் காலங் காலமாக நிற்பது இதன் சிறப்பாகும். ஆனால், வேதபாஷ்யம் என்பதை ஆராயும் வடமொழி விற்பன்னர்களும், சமயங்களில் அதன் சொற்கட்டு மற்றும் அதன் உள்ளுறை விசேஷங்கள் ஆகியவற்றை அறிய, எளிதாக அமையும் விதத்தில், வேத அங்கமான தைத்ரேய ஷாகா அனுபந்தம் உதவிடும்.
இந்த நுாலின் சிறப்பாக, அந்த உச்சரிப்பில் சிறிதும் மாறுபடாது காக்க வழிகாட்டும் குறிப்புகள் இதில் இருப்பதையும், சிறந்த தொகுப்பாக விளங்கியிருப்பதையும், சிருங்கேரி ஜகத்குரு பாரதி தீர்த்த மகா சுவாமிகள் தன் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது, இந்த நுாலின் பெருமையைக் காட்டுகிறது.
வேதவிற்பன்னர்கள் அத்துறையில் மாண்பைப் பெற உதவும் சிறப்பான சமஸ்கிருத நுால் இது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.