கற்பனையைக் கூட நிஜம் போல தரிசிக்க வைப்பது படைப்பாளனின் லாவகம். ‘ஜில் மழை’ குறித்த கதையில் சிறுவனின் எண்ணங்கள், நமக்குள் பெருமழையைப் பெய்விக்கின்றன. ‘சக்கரம்’ சிறுகதையில் சுகமான சோகத்தை வைத்தவர், ‘பிள்ளையார் சுழி’யில் அப்பாவித்தனமான நகைச்சுவையை வைத்துள்ளார்.
‘மன்னிப்பு’ சிறுகதையில் தந்தை – மகன் பாசத்தை வித்தியாசமான கோணத்தில் சொல்லி நெகிழ வைக்கிறார், நுாலாசிரியர் ப்ரணா.