பிரதோஷ வழிபாடு, தற்போது மிகவும் பிரபலமாகிவிட்டது. திரயோதசி திதி இருக்கும் மாலை வேளை, பிரதோஷ காலமாகக் கருதப்படுகிறது. பலர் பிரதோஷத்தன்று விரதம் இருக்கின்றனர். ஆனாலும், பிரதோஷத்தின் போது, சிவபெருமானை எப்படி வழிபடுவது; என்ன துதிகள் சொல்வது எனத் தெரிவதில்லை. இந்த குறையை போக்கும் வகையில், முக்கிய துதிகள், சிவாலயங்கள் பற்றிய விபரங்களும் இந்நுாலில் இடம்பெற்றுள்ளன.