கடவுளை கடவுளாகப் பார்ப்பது ஒரு வகை. கடவுளை மனிதனாகப் பார்ப்பது இன்னொரு வகை. கடவுளை, தந்தை – தாயாக, தோழன் – தோழியாக பார்ப்பது என்ன வகை... எந்த வகையிலும் சேராத பந்த வகை.
‘எவ்வளவு பக்கத்தில் கடவுளை பார்க்க முடியும்... எவ்வளவு பக்குவத்தில் அவரை உணர முடியும்’ என, எப்போதாவது நினைத்துப் பார்த்ததுண்டா? உண்டு எனில், உங்கள் மனசுக்குள் நீங்கா ரீங்காரமிட காத்திருக்கும் ஆன்மிக வண்டு தான் இந்த, ‘மனசில் பட்டதை!’
அந்த ஆண்டாள் செய்தது பாவை நோன்பு எனில், இந்த ஆண்டாள் செய்திருப்பதோ பாவை மாண்பு என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு, அவர் பயணித்த கோவில்கள், சந்தித்த தெய்வங்கள், அவர்களோடு நிகழ்ந்த இதயப் பரிமாற்றங்கள் என தன் அனுபவங்களை நெகிழ்ச்சியாக, நேர்த்தியாக, ‘தினமலர் – ஆன்மிக மலர்’ இதழில், 40 வாரங்கள் எழுதி வந்தார்.
வாசகர் மத்தியில் அந்த தொடர் ஏற்படுத்திய பாதிப்பின் விளைவு, அது இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. வாரந்தோறும் காத்திருந்து கிடைத்த அரிய விஷயங்கள், முழு புத்தகமாக கிடைத்தால் எப்படி இருக்கும்...? அதிரடி ஆபரில் ஆண்டவன் அருள் கிடைத்த உணர்வு தான்!
ஆண்டாள் மனசில் பட்டது, நம் மனசிலும் படுவதற்கான ஒரு வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!
– வெற்றி