பாரதியின் முப்பெரும் கவிதைகளான பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, கண்ணன் பாட்டு இவற்றில் காணப்படும் நகைச்சுவை பற்றி பேசப்படுகிறது. துரியோதனனுக்கு எழும் கோபம் பற்றி பாரதி விளக்குமிடத்து எள்ளலோடு கூடிய நகைச்சுவை வெளிப்படுவதை பாஞ்சாலி சபதத்திலும், பாரதி குயிலைக் காதலிப்பதே ஒரு நகைச்சுவை தொனி வெளிப்படுவதை குயில் பாட்டிலும் குறிப்பிடுவதை இந்நுாலாசிரியர் நினைவுகூர்வது பாராட்டுக்குரியது.