(இந்த புத்தகத்திற்கும், இதை வாங்கியவுடன் எனக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடல்)
‘‘நேரம் நல்ல நேரம்... தலைப்பெல்லாம் நல்லாத்தான்பா இருக்கு, ஆனா எனக்கு நேரம் நல்லா இல்லையே...?’’
‘‘ஏன் சார் நல்லா இல்லை?’’
‘‘அதான் தெரியலையே...’’
‘‘ஏன் தெரியலை?’’
‘‘அது தெரிஞ்சா நான் எதுக்கு உன்ன வாங்கப் போறேன்...?’’
‘‘அதான் வாங்கிட்டீங்கள்ல... அப்பறம் எதுக்கு இப்படி பொலம்பிக்கிட்டு இருக்கீங்க...?’’
‘‘என் கெட்ட நேரம்... பொலம்புறேன்!’’
‘‘நேரத்துல என்ன சார் நல்ல நேரம், கெட்ட நேரம்?’’
‘‘இருக்கு... அதெல்லாம் இருக்கு. நேரம் தான் ஒருத்தனை நல்லவனாவோ, கெட்டவனாவோ ஆக்குது’’
‘‘சரி, அப்படியே பார்த்தாலும், ஒரு நேரத்தை நல்லதாகவும், கெட்டதாகவும் ஆக்கிக்கறது மனுசங்க கையில இல்லையா?’’
‘‘என்ன யோசிக்கிறீங்க?’’
‘‘நீ சொல்றதுலயும் ஏதோ விஷயம் இருக்கும்போலயே...’’
‘‘ஏதோ இல்லைங்க, ஏதோதோ இருக்கு... இப்பக்கூட பாருங்க, வாங்கினதுல இருந்து என்கிட்ட வெட்டியா பேசியே இவ்வளவு நேரத்தை ஓட்டியாச்சு’’
‘‘ஆமால்ல...’’
‘‘என்ன ஆமால்ல... செய்ய வேண்டியதை எல்லாம் நீங்க செஞ்சுட்டு, பழியை மட்டும் நேரம் மேல போட்டுற வேண்டியது’’
‘‘போதும் இத்தோட நிப்பாட்டிரு!’’
‘‘இப்பக்கூட கோவப்பட்டு தான் டைம் வேஸ்ட் பண்றீங்களே ஒழிய, குற்றத்தை ஒத்துக்கிட்டு நேரத்தை உருப்படியா பயன்படுத்த முயற்சிக்க மாட்டேங்குறீங்க’’
‘‘ஓகே, இப்பவும் அமைதியா இருந்து நேரத்தை வீணாக்காதீங்க. என்னை முழுசா படிங்க. நேரத்தை – எங்க, எப்படி, என்ன மாதிரியெல்லாம் பயன்படுத்தலாம்னு ஏகப்பட்ட, ‘டெக்னிக்ஸ்’ தெரிஞ்சுப்பீங்க... தெரிஞ்சதோட அதை ப்ராக்டிகலாவும் அப்ளை பண்ணுங்க. அப்பறம் பாருங்க, உலகமே உங்களை படிக்கிற நிலைமைக்கு நீங்களும் உயர்ந்துருவீங்க. ஹலோ, இது தற்பெருமை இல்லைங்க, நேரத்தின் பெருமை!’’
– வெற்றி