முற்காலத்தில் பல்லடம் வட்டத்தின் சிறு கிராமமாக இருந்து, தற்காலத்தில் வந்தாரை வாழ வைக்கும் சிறப்புக்குரிய ஊர். அன்று நன்னீர் ஓடிய நொய்யல், இன்று மறைந்து போன நதியாகிவிடும் அபாயம் உள்ளது. கரிசல் பூமியின் பருத்தி, நெசவாளர்களுக்கு வாழ்வு தந்த இவ்வூரில் இன்று, பின்னலாடை மூலம் வேலைவாய்ப்பை தருகிறது. தியாகி குமரன் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்டோர் பங்காற்றிய பெருமைக்குரிய திருப்பூரின் வரலாற்றை விவரிக்கிறது இந்நுால்.