அடர் காட்டுக்குள் சலசலத்து ஓடும் சிற்றோடை எழில் வாய்ந்தது மட்டுமல்ல, பிரதிபலிக்கும் கண்ணாடி கவிதை என்பர். ‘முற்றிய பாண்டத்தை பிரித்தெடுக்கிறான்... அறுகிறது மண்ணின் தொப்புள்கொடி. வெம்மை தகிக்கும் நாற்சுவருக்குள் சுட்டெடுக்கிறான்... எரிதழல் கொப்பளிக்கும் இசை தின்ற மண் பொதி கடமென்று சமைகிறது’ என்ற கவிதை, இசை தின்ற மண் பொதி கடமென கவிஞரால் உருவாகின்ற அற்புதத்தை விதைக்கிறது.