சூரிய ஒளியை இரண்டு விதமாகப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும். ஒளி மின் அழுத்தம் என்பது நேரடியாக சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுவதாகும். சூரியக் கதிரை மின்சாரமாக மாற்றும் ஒளிமின் கலங்களைப் பற்றியும், அவற்றை இணைத்து மின் ஆற்றலை வழங்கும் ஆய்வு மற்றும் தொழிலைப் பற்றியும் குறிப்பதாகும்.
தினமும் தவறாமல் சூரிய ஒளி கிடைத்துக் கொண்டே இருப்பதால், இது வற்றாத ஆற்றலாக விளங்குகிறது என்கிறார் நுாலாசிரியர். இறைவன் நமக்கு அளித்த கொடையாகிய சூரிய சக்தியை பயன்படுத்தி எவ்வாறு மின்சாரம் தயாரிக்கலாம் என்பதை விவரிக்கிறது இந்நுால்.