இந்நுாலில் வெளியாகியுள்ள கவிதை வரிகள், முற்றிலும் பெண்களின் பெருமையையும், பாதுகாப்பையும் வலியுறுத்துகின்றன. ‘அடகு’ என்ற கவிதையில் நடுத்தர குடும்பங்களின் இயலாமைகளை அருமையாகச் சொல்லி, உள்ளத்தை நெகிழ வைக்கிறார். மலைப்பாம்பால் வளைக்கப்பட்ட உயிரினமாய், நடுத்தர குடும்பங்கள் சிக்கி திணறும் அவலத்தை அப்பட்டமாய் உணர்ந்து வெளிப்படுத்தியுள்ளார். இரைப்பை – கருப்பை – இடைவெளி என்கிற சிந்தனை, இதுவரை நாம் படித்த உலக பெருங்கவிஞர்களின் கவிதைகளில் கூட படித்திராத ஒன்று.