இன்றைய வாழ்க்கையில் இருந்து பிடித்தமான அக்கரைப் பயணத்திற்கு வழி சொல்லும் நுாலாக அமைந்திருக்கிறது. பொதுநல சேவைகளிலும், சுயமுன்னேற்றத்தின் கருத்துக்களை இந்த நுால் வாயிலாக வெளிப்படுத்துகிறார ஆசிரியர்.
மற்றவர்கள் பயன்பெறுவதே வாழ்வின் ஆனந்தம் என்பதை ஆசிரியர் விளக்குகிறார். வீடுகட்ட சரக்கொம்புகள் பயன்பட்டாலும், புது மனைவிழாவில், வாழைமரம் அழகுபடுத்தும். அது அழகை வௌிப்படுத்தினாலும், இருநாட்களில் அழுகி விடும். சரக்கொம்பு மீண்டும் லாரியில் பயணித்து அடுத்த வீடு கட்ட பயன்படும்.
இப்படி பல கருத்துக்கள் நுாலில் உள்ளன. மகத்தான சாதனை புரிபவர்கள் பல சோதனைகளை கடக்க வேண்டி வரும். ஒரு எண்ணத்தை தேர்வு செய்து, அதையே வாழ்க்கைப் பாதை முன்னேற்றமாக செயல்பட சிந்தித்து செயல்பட வேண்டும், என்ற சுவாமி விவேகானந்தர் கருத்து போல, பல கருத்துக்கள் நுாலில் அதிகமாக தொகுக்கப்பட்டிருப்பது சிறப்பு.
–பாண்டியன்