‘அகர முதல எழுத்து’ என, கடவுளுக்கு நிகராக எழுத்தை போற்றுகிறது, உலக பொது மறையான திருக்குறள்! கூர்மையான ஆயுதத்தை விட பலம் வாய்ந்தது, பேனா முனையால் எழுதும் எழுத்து என்பதை அனைவரும் அறிவோம்.
உலக மாந்தர் ஒவ்வொருவரது வாழ்க்கை, சிலருக்கு வரலாறாகவும், பலருக்கு செய்தியாக கேட்கவும் படிக்கவும் உதவுவது, எழுத்தாளர்களின் படைப்புகளாகும்.
நிகழ்வுகளை, நம் கண்முன் சுவாரசியமாக நிறுத்துவதில் துவங்கி, நாளும் பொழுதும் நம் சிந்தனையை துாண்டுவது எழுத்தாளர்களுக்கு கைவந்த கலை. அந்த எழுத்தின் மூலம் பிரபலமடைந்த சில எழுத்தாளர்களின் அனுபவங்களை, இந்நுாலில் தொகுத்து வழங்கியுள்ளார் ஆசிரியர்.
– அனு ரெக்சின்