இந்நுால், நுாலாசிரியரின் முதல் நுாலாக மட்டு மில்லாது முத்தான நுாலாகத் திகழ்கிறது.
குறும்பு பண்ணும் தன் மகனை அன்பால் திருத்தும் தந்தை, அறிவுதான் வாழ்க்கை என்று உணர்ந்த மாணவன், சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு மரங்களை வெட்டுதலே காரணமென்பதைத் தெளிவான அறிவுடன் கூறிய மாணவர்கள், எனற பல விஷயங்கள் சிறப்பாகும்.
பால்பாயின்ட் பேனாவை விடவும் இங்க் பேனா தான் கையெழுத்து அழகாய் வர உதவும் என்பதும் (பக்.18), கல்விக்கூடங்களில் கொலு வைப்பதை பாரம்பரிய கலாசார நிகழ்வு என்று கூறுவதும் (பக்.76), மும்மொழியை அவசியம் என விளக்குவதும் (பக்.84), மாணவ- – மாணவியரின் எதிர்காலம் குறித்த முன்னேற்றத்தைக் காட்டுகின்றன.
இந்நுாலில் உள்ள சந்திப்பிழைகளை அடுத்த பதிப்பில் நீக்க வேண்டும்.
– பேரா.டாக்டர் கலியன் சம்பத்து