பெரிய புராணம் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைத் தெரிவிக்கும் நுால் என்றாலும், சுந்தரரைத் தலைவனாகக் கொண்டது என்றாலும், நுாலின் பெரும்பகுதி திருஞானசம்பந்தரின் வரலாற்றையே கொண்டிருக்கிறது.
பாணர் குலத்தைச் சேர்ந்த திருநீலகண்டரைத் தன்னுடன் அனைத்துக் கோவில்களுக்கும் அழைத்துச் சென்று, ஜாதி பேதத்தைப் போக்கியவர் திருஞான சம்பந்தர். பிராமண வகுப்பைச் சேர்ந்த திருநீல நக்க நாயனாரின் இல்லத்தில், வேள்வி செய்யும் இடத்தில் அந்தத் திருநீலகண்ட யாழ்ப்பாணரைத் தங்க வைத்தவர் திருஞான சம்பந்தர்.
சைவத்தை வளர்த்தால் தமிழ் வளரும் என்னும் எண்ணத்தால் தொடர்ந்து சைவ சமயப் பணியைச் செய்து வந்தார் திருஞான சம்பந்தர். சமண சமயம் முதலான புறச்சமயங்கள் தமிழ்ப் பண்பாட்டுக்கு அப்பாற்பட்ட தன்மையுடன் இருந்த காரணத்தால் தான் அவற்றைப் புறக்கணித்தார். எளிய மொழிநடையில் இந்த நுால் அமைந்திருக்கிறது.