தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர் தான் இந்த புத்தக ஆசிரியர் நா.ரமேஷ். எந்த நேரமும் மரணத்தை எதிர்பார்த்து இருக்கும் இவரது அவய வங்களில் பாதிக்கப்படாதது, இப்போதைக்கு மூளையும், விரல்களும் தான்.
குழந்தைகளும், குழந்தைகளுக்கான கதைகள் எழுதுவதும் இவருக்கு ரொம்ப பிடிக்கும். இப்படி முடியாத சூழ்நிலையிலும் முயன்று, ‘நம்ம ஊரு குழந்தைகள்’ என்று மூன்று பாகங்களை வெளியிட்டுள்ளார். இப்போது வந்துள்ள மூன்றாவது பாகத்தில், ௧௫ கதைகள் உள்ளன. இதில், பெரியோருக்கு நீதி சொல்லும் கதைகளும் உள்ளன.
– எல்.முருகராஜ்