பிரபஞ்சத்தின் வெவ்வேறு காலகட்டங்களை தாங்கி, வெளிவந்த சிறப்பு வாய்ந்த, 15 நாவல்களை, அறிமுகம் செய்து வைத்திருக்கிறார், ஆசிரியர்.
அவற்றின் சிறப்பு குறித்த அறிமுகத்தோடும், படைப்பாசிரியர் குறிப்போடும், கதைச் சுருக்கத்தோடும் நடை பிறழாமல் அறிமுகப்படுத்தி இருப்பது சிறப்பு.
சுவாரசியக் கதையான, ‘ஐவன்ஹோ துவங்கி, ஒரு தலைமுறையின் சரித்திரமாகிய கிழவன்’ வரையிலும், உள்ளார்ந்த அர்த்தங்களுடன் தொனிக்கும், கனவு கதையான, ‘விசாரணை முதல் நேரடியாக தத்துவ பிரச்னைகளை நோக்கும் மந்திர மலை’ வரையிலும், இதிகாச புராண எல்லையை எட்டும், ‘கெஸ்டாவின் கதை முதல் அரசியல் திண்டனுடன் ஒரு கிராமம் அழிந்த காரியத்தை விவரிக்கும் முஸோலினி ராஜ்யம்’ என, எல்லா ரகங்களையும் அழகாகவும், நுட்பமாகவும் எளியநடையில் ஆழமாக அறிமுகப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.
– சிவகாமிநாதன்.