மருத்துவம், நவீன ஆப்பரேஷன், அதற்கான சிகிச்சை ஆகியவை குறித்து, அதிகமாக மக்கள் அறிந்து கொள்ளும் காலமாக மாறி வருகிறது.
ஆனால், காது, மூக்கு, தொண்டை மூன்றும் நம் முக்கிய உறுப்புகள். கேட்கும் திறன் பாதிப்பு அல்லது மூக்கில் சளி மட்டும் அல்ல, மற்ற சில பெரிய பாதிப்புகள், உணவு உண்ண முடியாத நிலைக்கு மாறும் தொண்டை என்பது கவலை தருபவை.
ஆனால், டாக்டர் குமரேசன் இத்துறையில் சிறந்த அனுபவத்துடன் அதிக நுண்ணறிவு பெற்றவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் படைத்திருப்பதுடன், பியூபர்போனியா சிகிச்சை என்பது குறித்த ஒரு இணைப்பையும் தந்திருப்பது சிறப்பாகும்.
கண்ணை மூடிக் கொண்டு, இரு கால்களையும் சேர்த்தபடி, 30 வினாடிகள் நிற்கும் நோயாளி உடலானது பாதிப்புள்ள காது பக்கம் சாயும். கண்ணை மூடிக் கொண்டு நடந்தால், நேர்கோடாக நடக்க முடியாது.
இதில் தலைச்சுற்றல் என்பது அடுத்த அணுகுமுறை. இதற்கு பயிற்சிகள், உரிய வைத்தியம் ஆகியவற்றை எளிதில் விளங்க வைத்திருப்பது, ஆசிரியர் இத்துறையில் வல்லுனர் என்பதை பாமரர்கள் அறிய உதவும்.
ஆனால், ஒரு இளைஞர் அல்லது பெண் பருவம் வந்த பின், அதுவரை இருந்த குரல் மாறுவது, கீச்சுக்குரல் அல்லது தட்டைக் குரல் என்பது, ‘பியூபர்போனியா’ என்றழைக்கப்படுகிறது.
குரல் பாதிப்பு நோய் என்பதை, இந்த நுாலை படிக்கும் போது அதில் உள்ள பல நுட்பங்கள் புரியும். குரல் மேம்பாட்டிற்கு முழு மூச்சு தேவை என்கிற மருத்துவர், அந்த பாதிப்பில் உயிரியல், உளவியல் சேர்கின்றன என்கிறார்.
இதை பேச்சுப் பயிற்சி மற்றும் மருத்துவ அணுகுமுறைகளில், ஒருவரது தொனியை உறுதி செய்யும் முறையை ஆசிரியர் மட்டும் நுண்ணிய முறையில் அணுகி, மக்கள் துயரை தீர்க்கிறார் என்பது சிறப்பானதகவல்.
மாறுபட்ட இந்த குரல் நிலைமை மட்டுமின்றி, காது, மூக்கு தொண்டை குறித்து, மருத்துவ சிகிச்சைகள், அறுவை சிகிச்சை உத்திகள் என்ற பல விஷயங்கள் உரிய படங்களுடன் தரப்பட்டு உள்ளன.
இந்த நுாலை டாக்டர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த அனைவரும் படித்தால், பல விஷயங்கள் தெளிவாகும். சமுதாய அக்கறையில் இந்த நுாலைப் படைத்த டாக்டர் குமரேசன் முழுவதும் பாராட்டிற்குரியவர்.
– பாண்டியன்