புதுக்கவிதை மட்டுமின்றி மரபும் கைவரப்பெற்றவர் இந்நுாலாசிரியர். ‘ஊரை அழித்து உலையிலா? இதெல்லாம் உதிப்பது மைய தலையிலா...’ என்ற கவிதை, மீனவப் பிரச்னை, மதப் பிரச்னை, வறுமை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு செவி சாய்க்காத மத்திய அரசை சாடுவதாக அமைந்துள்ளது. இந்நுாலாசிரியர் அழகுக்கு உவமையே இல்லையென்று கொடியை உயர்த்திக் கொடி பிடிக்கிறார். – மாசிலா இராஜகுரு