‘ஆர்யமாம் திராவிடமாம் அத்தனையும் புளுகே’ என துவங்கி, ‘பாரதி பார்வையில் பிராமணர்கள்’ ஈறாக, 13 கட்டுரைகள் பெரும்பாலும் திராவிட இயக்க எதிர்ப்புக் கருத்துக்களை உள்ளடக்கியவையாகும்.
கடந்த, 1965ல் காங்கிரசை வீழ்த்த ராஜாஜி தான் ஹிந்தியை எதிர்ப்பதாக நாடகம் ஆடினார் -– பக்., 56.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் தேதியை, ராஜ்யோத்சவ நாளாக ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் கொண்டாடி வருகின்றன. ஆனால், தமிழக அரசு கொண்டாடவில்லை – பக்., 60.
இப்படி பலவிதமான கருத்துக்களுடன், ஆரிய – திராவிடப் போக்குகளை அரசியலோடு பிணைத்து, தலைமைச் செயலகத்தில், 1967 – 1969ல் பணியாற்றியபோது, ஆர்.பா.வே.சு., மணியன் என, நான் மட்டும் தான் தமிழில் கையெழுத்திடுவேன் என்று கூறும் நுாலாசிரியர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் என்று ஆங்கிலத்திற்கு மாறியது எப்போது? நுாலின் தலைப்புக்கும் உள்ளீட்டுக்கும் சம்பந்தம் உள்ளதா என்பதும் தெளிவில்லை. தமக்குச் சாதகமான கருத்துக்களை நுால் வடிவில் தந்துள்ளபோதிலும் சிந்தனைக்குத் தீனிபோடும் செய்திகள் பல இதில் அடக்கம்.
– பின்னலுாரான்.