இன்றைய காலகட்டத்தில் பெரும் பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது, வேலையில்லாத் திண்டாட்டம். இந்நுாலில், ‘வேலை தேடும் வேலையைச் செய்பவர்கள்... கரிகூட திரும்ப எரியும்! வாலிபத்திலேயே வாழ்விழந்த நாங்கள் வாழ்வது யாருக்காக?’ என்ற கவிதை, மனித வாழ்க்கையின் மையப் பிரச்னையை கனத்த நெஞ்சோடு சொல்லிச் செல்கிறது. புதிய வெளிச்சங்களை சமூகத்திற்கு தருபவையாக, காஞ்சியன்பனின் கவிதைகள் திகழ்கின்றன. – மாசிலா இராஜகுரு