பாம்பன் சுவாமிகளின் பாடல்கள் அனைத்தும் மந்திரங்கள். அவருடைய பல பாடல்களில், சில பாடல்களையாவது நித்திய பாராயணம் செய்தால், நமக்கு, அளவு கடந்த பலன்கள் கிட்டும். பகைக்கடிதல், குமாரஸ்தவம், சண்முகக் கவசம் ஆகிய இந்த மூன்று பாடல்களுக்கும், சிறப்பாக விரிவுரை எழுதியுள்ளார் ஆசிரியர். குமாரஸ்தவம் – இம்மைத் துன்பம், பிறவித் துன்பம் எனும் வெப்பங்களைப் போக்கும். பக்தி இலக்கியம். – எஸ்.குரு