காக்கி சட்டைக்குள் இருக்கும் கவிஞனின் கவர்ந்திழுக்கும் கவிதைகள். ஆம்... மதுரை காவல் உதவி ஆணையாளரும், எழுத்தாளருமான முனைவர் மணிவண்ணனின் கைவண்ணத்தில் உருவான முத்தான கவிதைகளின் தொகுப்பு இது. வாழ்வியல், அறம், மனம், இறைவன், பொருள், காதல், தன்னம்பிக்கை என, பல பக்கங்களை ஒரே நுாலில் தொட்டிருக்கிறார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வீரவசந்தராய மண்டபத்தில் திடீர் தீ விபத்தில் உயிர்துறந்த புறாக்களுக்கு இந்நுால் சமர்ப்பணம்’ என்ற வித்தியாசமான சிந்தனையுடன் ஆரம்பிக்கும் நுாலின் முதல் பக்கமே, கடைசி பக்கம் வரை நம்மை முழுமூச்சில் இழுத்து சென்று விடுகிறது.
‘நான் தேர்ந்தெடுத்த காவல் துறை வாழ்க்கை என்னை செம்மைப்படுத்தி, செதுக்கியுள்ளது’ என்று முதல் கவிதையில் கூறியுள்ளார். காவல்துறை மீது மக்களுக்கு நல்லெண்ணம் ஏற்படுத்தும் விதத்தில் இந்த வரிகள் அமைந்துள்ளன.
‘‘உலகின் மிகச்சிறந்த வலிநிவாரண மருந்து பேரன், பேத்திகளின் சிரிப்பும் தழுவலும்!’’ என்பது போன்ற குடும்ப பாசம் காட்டும் கவிதைகளும் கவர்கின்றன.
-– ஜிவிஆர்