கதைகள் பல கருத்துக்களை கொண்டவை என்பது அதன் சிறப்பு. அதில் கருத்துக்கள் இருந்தால் அதன் வளம் புரியும்.
அந்த வளத்தைக் காட்டும் தகவல்கள் இதில் பொதிந்துள்ளன. உதாரணமாக, ஒரு கதையில், மட்டையுடன் கூடிய முழுத்தேங்காயை மாட்டு வண்டியில் எடுத்துச் சென்றார்.
அவர் செல்ல வேண்டிய சந்தைக்கு, அவ்வழியில் சென்ற சிறுவனிடம் கேட்டார்.
அவனோ, பாதையைக்காட்டி ‘பொறுமையாக சென்றால், 15 நிமிடம் ஆகும். வேகமாக சென்றால், 30 நிமிடம் ஆகும்’ என்றான்.
பையனின் கருத்தை ஏற்காத அவர் வேகமாக சென்றார். பாதை கரடுமுரடாக இருந்ததால், மட்டைத் தேங்காய் கீழே விழ, அவற்றைப்பொறுக்கி அதன் பின் செல்ல அதிக நேரம் ஆனது. அப்போது அவர் மனதில் சிறுவன் புத்திசாலித்தனம் பளிச்சிட்டது. இப்படிப் பல அம்சங்களைக் காணலாம்.