இந்நுாலின் ஆசிரியர் வேதம், இதயத்தில் குடியிருக்கும் கடவுளுக் கெல்லாம் முதல்வனாம் கணநாதனை தொழுது வணங்கி, தெய்வீக மணத்துடன் மலர்மாலை தொடுப்பது சிறப்பு.
‘கோவில் கொள்ளை ஒரு பக்கம், குடிசை கலைத்தல் ஒரு பக்கம், காவல் உடையில் பல கறைகள், அதைக் காக்க சதிகள் பல பக்கம்...’ என்ற கவிதை வரிகள், இன்றைய காலத்தில் அரங்கேறி, முடைநாற்றமெடுக்கும், ‘மனிதனின் அக்கறை’யை குறிப்பிடுவதாக உள்ளன.
‘முதலுக்கே மோசம், பேய்மழைத் தெரு, சரணாகதி, நிலமெனும் பஞ்சபூதம், இமயத்தில் அந்திப்பொழுது, உலகம் என்னும் பந்தினை உருட்டுவது நீயா? சுமையும் சுவையும்’ உள்ளிட்ட கவிதைகள், சமூகவியல் நிகழ்வுகளை காட்டுவன.
எளிய இனிய நடையிலுள்ளது இந்நுால்.
– மாசிலா இராஜகுரு