நாவலாசிரியர் குடந்தையான் நிறைய எழுதிக் குவித்திருக்கும் ஒரு படைப்பாளி. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி. ‘கடலுக்குள் சங்கமம், பறந்து திரியும் பறவைகள்’ என, இரு நாவல்கள் உள்ள தொகுதி இது. இரண்டு லட்சிய எழுத்து!
முதல் நாவல், ஜாதி, மத வெறியற்ற சமரச சமுதாயத்தை காண விழைகிறது.
இரண்டாவது நாவல், பறந்து திரியும் பறவைகள். இது, மாணவரை சீர்திருத்தும் நாவல். சில திரைப்படங்கள் மாணவனின் மன வளர்ச்சியை சிதைத்து கெடுத்து விடுகின்றன.
திருட்டை, கொலையை, கொள்ளையை, விபசாரத்தை நியாயப்படுத்தும் திரைப்படங்களை தடை செய்யக் கோரி, மாணவனின் மனசாட்சி அவனை எச்சரிக்க வேண்டும்.
வீட்டில் வளர்ந்தாலும், கல்லுாரி ஹாஸ்டலில் வளர்ந்தாலும் மாணவன் கட்டுப்பாட்டுடன் இருந்து, கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று பேசுகிறார்.
மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நல்ல நாவல்.
– எஸ்.குரு