காமிக்ஸ் புத்தகங்கள் படிக்கும் வழக்கம் கடந்த, 70 – 80ம் ஆண்டுகளில் அதிக அளவில் இருந்தது.
பல நிறுவனங்கள் காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்டிருந்தாலும், ஆங்கிலத்தில் வெளியான காமிக்ஸ் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து வழங்கியதில் முன்னணியில் இருந்தது, முத்து காமிக்ஸ்.
பேன்டம் மற்றும் இரும்பு கை மாயாவி போன்ற கற்பனை கதாபாத்திரங்களில் வீரதீர சாகச கதைகள், வாசகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன.
அந்த வரிசையில், சிவகாசியைச் சேர்ந்த, லயன் காமிக்ஸ் நிறுவனத்தார், ஆங்கிலத்தில் பிரபலமாக இருந்த காமிக்ஸ் கதாபாத்திரங்களான, லக்கி லுக், ஜாலி ஜம்பர், டெக்ஸ் வீரரின் தொடர் சாகசங்கள் மற்றும் ஜனாதன் போன்ற கதாபாத்திரங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதைகள், தமிழில் மொழிபெயர்த்து, புத்தகங்களாக வெளியிட்டு வருகின்றனர்.
தரமான தாளில், அழகான படங்களில் வெளியிடுவதால், படிக்கும் ஆர்வத்தைத் துாண்டுகிறது.
பலரது அபிமானத்தைப் பெற்ற கதைகளான, பேன்டம் மற்றும் இரும்பு கை மாயாவி போன்ற சாகச கதைகளை மீண்டும் வெளியிட்டால், காமிக்ஸ் படிக்கும் வழக்கமுள்ள பலரது வரவேற்பை பெறும்.