மவுரிய வம்சம் இந்திய அரசியலில் மேலோங்கி விளங்கக் காரணமாயிருந்த, சாணக்கியரின் அர்த்த சாஸ்திர நுால் சமஸ்கிருத ஓலைச்சுவடிகளால் ஆனது. சென்ற நுாற்றாண்டில் அச்சு வடிவம் பெற்று பல மொழிகளில் பெயர்க்கப்பட்ட அது மீண்டும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
கன்று ஈனாத மலட்டுப் பசுவுக்கும், கறவை நின்ற பசுவுக்கும் மதிப்பு உண்டா... இல்லை; அது போல கல்வியறிவு இல்லாத மகனாலும், கடவுள் பக்தி இல்லாத மகனாலும் யாது பயன்?
காஞ்சிபுரம் வி.ஸ்ரீநிவாசமூர்த்தியின் விளக்கக் குறிப்பு (பக்., 130 – 134) சமஸ்கிருதம் பற்றியும், இந்நுால் உருவாக்கம் பற்றியும் அறிந்து கொள்ள ஓரளவு உதவுகிறது.
– பின்னலுாரான்