நுாலாசிரியர் கனகாவின் கவிதைகளில், அவரின் வீட்டு நினைவுகள், உறவுப் பிணைப்பு, காதல், கடமை உணர்ச்சி, இயற்கை என்றே சுற்றி சுழன்று வருகின்றன. ‘பகிர்தல் ஏதுமில்லையாயினும் உச்சரித்துக் கொண்டே இருப்பேன்... உன் பெயரை உயிர் வாங்கும் நச்சரிப்பென்று வெறுத்து விடாதே...!’ என்ற கவிதையில், இரண்டு உள்ளங்களுக்கு இடையே உள்ள திகட்ட திகட்ட ததும்பும் அன்பின் அங்கலாய்ப்பை உணர்ச்சி பொங்க சொல்கிறார். – மாசிலா இராஜகுரு