மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது சான்றோர் வாக்கு. அருணகிரியாருக்கு முருகனே குருவாய் வர வேண்டும் என்ற ஆசையால், குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்றார். நெமிலி ஜி.பாபாவிற்கு, பாலாவே குருவாக ஆட்கொண்டார் என்ற தகவல் உள்ளது.
குருவருளும் திருவருளும் துவங்கி, குருவின் ஆற்றல் வரை, 10 தலைப்புகளில் இந்த நுால் பேசுகிறது. படிப்போருக்குக் கிடைக்கும் பாக்கியம் எனலாம்.
இந்த நுாலின் தனி சிறப்பே நாமாவளிகள் தான். ஆம், 108 நாமாவளிகளை ஒன்பது தலைப்புகளில் பக்தி நயத்தோடு அமைத்துள்ளார். சங்கடம் நீக்கியே மங்கலம் தந்திடும் சத்திய நாயகி ஸ்ரீ பாலா. சாதிக்க வந்தவள், சாதிக்க வைப்பவள் ஸ்ரீ பாலா. (பக்., 78) நுாலாசிரியர் தம் அனுபவத்தைக் கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும் வடித்துத் தந்துள்ளார். நெமிலி ஸ்ரீ பாலா குருபீடம். இந்த நுால், அன்பு அன்னை பாலாவின் அழைப்பு, அரவணைப்பு. நூலைப் படித்து ஸ்ரீ பாலா அன்னையின் அருள் பெறலாம்.
பேராசிரியர் இரா.நாராயணன்