உலக நியதியில் கண்களால் காண்பதும், காதால் கேட்பதும் அவற்றின் உண்மைத் தன்மையை உலகோர் அறியும் வண்ணம் எடுத்துரைப்பதாகும். கண்களால் பார்க்கின்ற அழகை எடுத்துச் சொல்வதென்பது நாவின் வழியாக நற்செய்திகளை சொல்வதாகும். நல்ல செய்திகளை குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் பகிர்வதும் நற்சிந்தனையாகும் என்று இந்நுாலில் கூறுகிறார் ஆசிரியர் வி.ஜி.சந்தோசம்.