நம் பேச்சாளர்களில் பலர் சிறந்த சிந்தனையாளர்கள், சிறந்த சமூக சீர்திருத்தவாதிகள். இவர்களது புரட்சிகரமான சொற்பொழிவுகள், மகத்தான சமுதாய மாற்றங்களைச் சாத்தியமாக்கி உள்ளன.
நம் மாணவர்கள் பயனுற வேண்டும் என்பதற்காக, இந்தச் சொற்பொழிவுகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கித் தந்திருக்கிறார் நுாலாசிரியர்.
பாலகங்காதர திலகர், பகத் சிங், நேரு, அம்பேத்கர், ஜெயப்பிரகாஷ் நாராயண், இந்திரா, இயேசு கிறிஸ்து, முகமது நபிகள், நெப்போலியன் போன்றோரது சிறந்த பேருரைகள் இந்நுாலில் உள்ளன.
பாரதியார் கவிதைகளுக்கு பிரிட்டிஷ் அரசு தடை விதித்தபோது, சட்டசபையில் தீரர் எஸ்.சத்தியமூர்த்தி பேசியது (பக்., 196).
ஹிந்தி பிரசார சபாவுக்குள் காவல் துறை அத்துமீறி நுழைந்து, சுப்ரமணிய பாரதியாரின் கவிதைகளில், 2,000 பிரதிகளைக் கைப்பற்றியுள்ளது.
இக்கவிதைகள் ஒரு தமிழன் இருக்கும் வரை, தமிழ் மொழி இருக்கும் வரை ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் நிலைத்து நிற்கும்! இப்படி பல எழுச்சியூட்டும் பேருரைகளை இந்நுாலில் படித்து சிலிர்ப்படையலாம்! மேடைத் தமிழ் இலக்கியப் பொக்கிஷம்!
– எஸ்.குரு