பெரியபட்டினம் இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறந்ந துறைமுகப் பட்டினமாக இருந்த ஊர்.
இன்றும் சிவகங்கை அருகே உள்ள கீழடி அகழ்வாய்வு, தமிழகத்தில் தென்பாண்டி நாடு கலாசார கேந்திரம் என்பதை உணர்த்துகிறது அல்லவா... பெரிய பட்டினத்தில் கிடைத்த பாண்டிய, சோழ, சேர மன்னர்கள் காசுகள் தவிர தமிழகத்தில், விஜயநகர அரசர்கள், ஆங்கில ஐரோப்பிய கம்பெனிகள் காசுகள் என்று பலவற்றை இந்த நுாலில் விளக்குகிறார் ஆசிரியர்.
சங்க கால பாண்டியர் காசுகளை நாணயவியல் அறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தரவுகளுடன் ஒப்பிட்ட ஆசிரியர், பெரிய பட்டினத்தில் மதுச்சாடிகள் உட்பட பல தரவுகள் கிடைத்ததை பதிவு செய்திருக்கிறார்.
நாணயவியல் அறிஞர்கள் விளக்கிய ஆதாரங்களுடன் பல்வேறு பிற்கால நாணயங்களை வகைப்படுத்தி, கறுப்பு, வெள்ளைப் படங்களாக ஆவணப்படுத்தி, அதில் உள்ள உலோகம், அவற்றின் தனித்தன்மைகளும் இந்தநுாலில் தரப்பட்டுள்ளன.
கிருஷ்ண தேவராயர் கால காசுகள் நேர்த்தியாகவும், பிற்காலத்தில் காசுகள் இயந்திரத்தில் அச்சடிக்கப்பட்ட விஷயங்களும் நுாலில் உள்ளன.
நாணயவியல் துறையை விரும்பும் சிலர் இந்த நுாலைப் படித்தால். அத்துறை ஆய்வில் அதிக ஆர்வம் ஏற்பட வாய்ப்பு வரும்.
– பாண்டியன்