இது இறைவன் புகழ்பாடும் மற்றும் வாழும் தெய்வீக இடங்களில் மரங்கள் அதன் தல விருட்சம் என்ற பெயரில் போற்றப்படுவது இம்மண்ணின் சிறப்பு.
சிவ பெருமான், ‘ஆலமர் செல்வன்’ என்ற பெயருடன் இருப்பவர். முருகன் கடம்ப மரத்தோன், சக்தி வேம்பில் உறைபவள் என்ற பல தகவல்கள் உண்டு. திருப்பனந்தாள், பனையபுரம், திருமுல்லைவாயில் என்ற ஊர்ப்பெயர்கள் இதை தெளிவாக்கும். இந்த நுாலில் பல சிறப்புகள் உண்டு.
வெறும் கோவில் அல்லது வழிபாடு என்ற கருத்துடன் மரங்களை இணைத்து, அல்லது தாவரஙகளை இணைத்து நுால் உருவாக்கவில்லை.
ஆசிரியர் தாவரத் தகவல் மையம் வைத்திருப்பவர் ஆதலில் அத்தாவரத்தில் இயற்பெயர், ஆங்கிலப் பெயர், மருத்துவ குணம், அதைப்பற்றிய தாவரவியல் தகவல்கள், நோய்க்கு மருந்தாக பயன்படும் அதன் குணங்கள் என்று இந்த பெரிய முயற்சியை செய்திருக்கிறார். அவரது வார்த்தையில் இறையுணர்வுடன் இயற்கையை இணைக்கும் பணியாகும்.
மேலும் இந்த நாட்டில் தான் பஞ்ச பூதங்கள் என்ற கருத்தும் இயற்கையுடன் இயைந்தது உயிர், அதைத்தாங்கும் உடல் ஒரு கருவி என்பதும், தமிழக இலக்கியங்கள் இயற்கையை நேசித்த விதமும் பலர் அறிய இந்த முயற்சி மிகச் சிறப்பானதாகும்.