தமிழகத்தில் குல தெய்வ வழிபாடு மிகவும் சிறப்பு பெற்றது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் குல தெய்வம் உண்டு. இந்த குல தெய்வங்கள், பெரும்பாலும் கிராம தேவதைகளாகத் தான் இருப்பர்.
கிராம தேவதைகளை வழிபடும் பலருக்கு, அவற்றின் வரலாறு தெரியாது; எதனால், வழிபடுகிறோம் என்றும் தெரியாது.
அந்த குறையை போக்கும் வகையில், கிராம தேவதைகளான அய்யனார், கருப்பன்,மாடசாமி, மதுரை வீரன், பேச்சி பற்றி, ஆசிரியர் நீலகண்டன் எளிய தமிழில் சுவைபட எழுதியுள்ளார்.
இந்நுாலில், அய்யனார், கருப்பன் போன்றோரை காவல் தெய்வங்களாகவும், நம்முடன் வாழ்பவர்களாகவும் கிராம மக்கள் கருதுவதை ஆசிரியர் எழுதியுள்ளதை படிக்கும் போது, மனம் அதிசயிக்க வைக்கிறது.
– சாவித்ரி சங்கர்