சுதந்திர சுவாசம் நிறைந்த இன்றைய நாளில், 20 வயது இளைஞர்கள் சமூக வலைதள வீரர்களாக ஒளிந்தபடி ஒளிப்பதிவுகள் செய்து கொண்டிருக்க, 18ம் நுாற்றாண்டில் அதே இளம் வயதில் ஒரு ஒப்பற்ற மாவீரனாக விளங்கிய நெப்போலியனின் நிகரற்ற வரலாறே இந்நுால்!
பிரெஞ்சின் சூழ்ச்சியாலும், ஆயுத பலத்தாலும், கொடுமைகளாலும் கொந்தளித்திருந்த கார்சிகாவில், கருவில் குழந்தையைச் சுமந்து கணவனோடு போர்க்களத்தில் இருந்த வீரப்பெண்மணி வெட்டீசியாவுக்கு, ஆகஸ்ட் 15, 1769ம் ஆண்டு பிறந்த சரித்திர நாயகன் தான் நெப்போலியன் போனபார்ட்!
நெப்போலியன், 24 வயதில் போர் தந்திரங்கள் பெற்ற வெற்றிகள், அவனைப் புகழின் உச்சிக்கு ஏற்றின. ஐரோப்பியக் கண்டத்தின் பெரும் பகுதியை ஆண்டு அதிர வைத்து, எழுச்சியையும் வீழ்ச்சியையும் சந்தித்ததும், எண்ணியவற்றைச் சாதித்ததும் நெப்போலியனின் மன உறுதியைப் புலப்படுத்தவல்லன.
ஆயுத பலமே பெரிது என்று போர்களைத் தொடுத்து சர்வாதிகாரியான நெப்போலியன், பின்னாளில் ஆன்ம பலமே உயர்ந்தது என்று உணர்வதும் குறிப்பிடத்தக்கது.
– மெய்ஞானி பிரபாகரபாபு