தல வரலாற்றில் பண்டைய தமிழ்ச் சொற்களின் மூலம் ஆசிரியர் வாசகர்களை வியக்கச் செய்கிறார். கேது முனிவர் வழிபட்ட சிவன் பற்றிய சிறப்பைச் சொல்கிறது இந்நுால். காலக் கணக்கை திருவள்ளுவர் ஆண்டு, தி.பி., – தி.மு., என புதியதாய் விளக்கம் தருகிறார். மகா துவட்டாபுரம் முதல் கத்தோலிக்கர் காலம் வரை வாழ்ந்த மன்னர்கள் மற்றும் இலக்கியங்கள் பற்றிய குறிப்புகளைச் சொல்கிறது இந்நுால். எளிய விலையில் புராதன சொற்கள் அடங்கிய குறுநுால் எனலாம்.