உலகம் தோன்றியபோதே தமிழகமும் தோன்றியிருக்கக் கூடும் என்கின்றனர். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வரலாறு இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டமும் எப்படி தோன்றியது என்று வரலாறு இருக்கிறது. ஆனால், மதுரை எப்போது தோன்றியது என்று வரலாற்று ஆய்வாளர்களால் கணிக்க முடியவில்லை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மாவட்டம் என்கின்றனர் சிலர். எனவே, கோவில் மாநகர், அரசியல் நகரம், துாங்கா நகரம், பண்பாட்டு நகரம், கடம்பவனம் என, பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் மதுரை வரலாற்றை ஆய்வு செய்யும் நோக்கில், நுாலாசிரியர் உருவாக்கியது தான், ‘மதுரை மாவட்ட தகவல் பெட்டகம் ஆயிரம் செய்திகள்’ எனும் நுால்.
‘மதுரையின் அமைப்பு முறை’ எனும் தலைப்பில் முதல் தொகுதியை துவக்கி, ‘முன்னொரு காலத்தில் மதுரையில் ஓலை’ எனும் தலைப்பில், 14வது தொகுதி வரை மதுரையை ஆராய்ந்து நுாலை வடித்துள்ளார் நுாலாசிரியர் கணேசன்.
– காசு